சூரிய நமஸ்காரம்


 சூரிய நமஸ்காரம்:

சூரிய நமஸ்காரம் மொத்தம் 12 ஆசனங்களைக் கொண்டது. வேலை காரணமாக காலையில் யோகா செய்ய நேரம் இல்லாதவர்கள் இந்த ஒரு ஆசனத்தையாவது தினமும் செய்யுங்கள். இந்த சூர்ய நமஸ்காரத்தைச் செய்வதால் நுரையீரலின் செயல்பாடுகள் மேம்படுகிறது. டயபெட்டீஸ் வருதற்கான காரணிகளைக் கட்டுப்படுத்துகிறது. தசைகளை வலுபெறச் செய்கிறது. ஹைபர் டென்ஷன் ஆகாமல் இருக்க உதவுகிறது. பெப்டிக் அல்சர் வருவதைத் தடுக்கிறது. சியாடிகா எனும் கீழ் முதுகு வலி, மூட்டு வலி ஆகியவற்றை தடுக்கிறது. மாதவிடாய் இருப்பவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் இதனைச் செய்ய வேண்டாம்.