வரும்போது மேடையிலே (Varumpodhu Medaiyile)

வரும்போது மேடையிலே (Varumpodhu Medaiyile)


🎬படம்      :  தாலாட்டு (1969)

✒️வரிகள்:  மாயவநாதன்

🎼 இசை  :   M.L.ஸ்ரீகாந்த்

🎙பாடகர்கள்:சீர்காழி கோவிந்தராஜன்


ஊராண்ட மன்னருக்கும் ஓரிடத்தில் பொதுவுடைமை

வாழ்வென்னும் பயணத்தின் முடிவினிலே சமவுரிமை

வாழ்ந்திருந்த தங்க உடல் வாசல் தேடி போகுதம்மா.....

அம்மா.......அம்மா......அம்மா......அம்மா.........


வரும்போது மேடையிலே விளையாடினோம்

இங்கு முடிவாகி போகையிலே விடை கூறினோம்

வரும்போது மேடையிலே விளையாடினோம்

இங்கு முடிவாகி போகையிலே விடை கூறினோம்


புரியாத வாழ்க்கையிலே நடமாடினோம் உலகில்

பிறப்போடு கேள்விக்கும் இடமாகினோம்...

புரியாத வாழ்க்கையிலே நடமாடினோம் உலகில்

பிறப்போடு கேள்விக்கும் இடமாகினோம்...


வரும்போது மேடையிலே விளையாடினோம்

இங்கு முடிவாகி போகையிலே விடை கூறினோம்


வருவோர்க்கு உலகம் தாய் வீடு-இங்கு

வாழ்ந்தோரின் கதை கூறும் சுடுகாடு

வருவோர்க்கு உலகம் தாய் வீடு-இங்கு

வாழ்ந்தோரின் கதை கூறும் சுடுகாடு


உருவாக்கும் வேலை அவன் விளையாட்டு 

உருவாக்கும் வேலை அவன் விளையாட்டு

உயிர் பிரிவாக்கும் அவன் பாட்டு...தாலாட்டு..


வரும்போது மேடையிலே விளையாடினோம்

இங்கு முடிவாகி போகையிலே விடை கூறினோம்


மலையாக இருப்பதெல்லாம் ஆசை வடிவம்–அது

மண்ணாகும் போது ஞானி வடிவம்

நிலையாக மனிதன் ஒரு கலை வடிவம்–உயிர்

நின்றாலே அவனும் ஒரு சிலை வடிவம்...


வரும்போது மேடையிலே விளையாடினோம்

இங்கு முடிவாகி போகையிலே 

விடை கூறினோம்.......விடை கூறினோம்.... 

விடை கூறினோம்


#Mayavanathan  #Sad Song   #Rarecollection    #NWR